தொப்புள்கொடியை வெட்டும் இர்ஃபான்: வீடியோவை நீக்க யூடியூபுக்கு மருத்துவத் துறை கடிதம்

ஏற்கெனவே, இர்ஃபான் மனைவி கருவுற்றிருந்தபோது, கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிந்து வீடியோவாக வெளியிட்டிருந்தது முன்பு சர்ச்சையானது.
தொப்புள்கொடியை வெட்டும் இர்ஃபான்: வீடியோவை நீக்க யூடியூபுக்கு மருத்துவத் துறை கடிதம்
படம்: https://www.youtube.com/@irfansview1
1 min read

குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டுவதை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இர்ஃபானின் வீடியோவை நீக்கக்கோரி யூடியூப் நிறுவனத்துக்கு மருத்துவத் துறை கடிதம் எழுதியுள்ளது.

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24 அன்று குழந்தை பிறந்தது. தனது அன்றாட வாழ்க்கையை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வரும் இர்ஃபான் குழந்தை பிறந்தது தொடர்பாகவும் யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவில் அறுவைச் சிகிச்சை அறையில் மனைவி இருப்பதையும் குழந்தை பிறப்பதையும் தொப்புள்கொடியை வெட்டுவதையும் இர்ஃபான் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சர்ச்சையாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, இர்ஃபான் யூடியூப் பக்கத்திலிருந்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கக் கோரி யூடியூப் நிறுவனத்துக்கு மருத்துவத் துறை கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்படலாம் அல்லது விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே, இர்ஃபான் மனைவி கருவுற்றிருந்தபோது, கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிந்து வீடியோவாக வெளியிட்டிருந்தது முன்பு சர்ச்சையானது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in