பிரபல யூடியூபர் அபிஷேக் கைது!
பிரபல யூடியூபர் அபிஷேக் கைது!

பிரபல யூடியூபர் அபிஷேக் கைது!

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் பிரபல யூடியூபர் அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக பிரபல யூடியூபர் இர்ஃபான் - அபிஷேக் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் தங்களின் கருத்துகளை காணொளி மூலம் வெளியிட்டு சண்டை போட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அபிஷேக் யூடியூப் லைவில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அபிஷேக், தமிழக சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்ய முயற்சித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in