நீங்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல: தவெக தலைவர் விஜய்

நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள் என்று அனைவரும் கூறவேண்டும்.
நீங்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல: தவெக தலைவர் விஜய்
1 min read

இனிமேல் நீங்கள் என்னுடைய சமூக ஊடக ரசிகர்கள் மட்டும் கிடையாது, என்னைப் பொருத்தவரையில் நீங்கள் நம் கட்சியின் ‘Virtual Warriors’ என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தவெக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் கூட்டம் இன்று (ஏப்.19) சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களிடம் பதிவு செய்யப்பட்ட காணொளி வாயிலாக அக்கட்சித் தலைவர் விஜய் கூறியதாவது,

`இந்த கூட்டம் நடைபெறும்போது ஜூம் வழியாக உங்கள் அனைவரிடமும் பேசவேண்டும் என்றுதான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நெட்வொர்க் பிரச்னை காரணமாக அப்படிச் செய்யமுடியவில்லை. இதனால் பதிவு செய்யப்பட்ட இந்த செய்தியை அனுப்புகிறேன்.

இதன் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நம்முடைய இந்த சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். இதை நாம் சொல்வதைவிட, மற்றவர்களே அதைப்பார்த்துத் தெரிந்து கொள்கின்றனர்.

இனிமேல் நீங்கள் அனைவருமே, என்னுடைய சமூக ஊடக ரசிகர்கள் மட்டும் கிடையாது. என்னைப் பொருத்தவரைக்கும், நீங்கள் அனைவருமே நம் கட்சியின் ‘Virtual Warriors’. அப்படித்தான் உங்கள் அனைவரையுமே அழைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அப்படி அழைப்பது சரிதானே? அது பிடித்திருக்கிறது தானே?

நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள் என்று அனைவரும் கூறவேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு அனைவருமே வேலை பாருங்கள். கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன். அதுவரை உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். வெற்றி நிச்சயம். நன்றி’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in