சென்னையில் ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா: திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் | Amusement Park |

53 பிரமாண்ட ரைடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா, டிசம்பர் 2 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு....
சென்னையில் ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா: திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னையில் ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா: திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
1 min read

சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இந்தியாவில் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான வொண்டர்லா, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், புவனேஷ்வர் ஆகிய நகரங்களை உள்ளன. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 64.30 ஏக்கர் பரப்பளவில், ரூ. 611 கோடி மதிப்பீட்டில், குழந்தைகள், இளைஞர்கள், குடும்பங்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உலகத் தரம் வாய்ந்த 43 பிரமாண்டமான ரைடுகளுடன் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 6,500 பேர் பூங்காவுக்கு வருகை தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் முதல் தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்விஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு, இந்தப் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் மிக உயரமான ஸ்பின் மில் ராட்டிணம், பூங்காவின் முப்பரிமாண காட்சியை வழங்கும் 540 மீட்டர் நீளமுள்ள ஸ்கை ரயில் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 1,489 கட்டணமும், குழந்தைகளுக்கு ரூ. 1,191 கட்டணமும், முதியோருக்கு ரூ. 1,117 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை வார இறுதி நாள்களில் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவுக்கு 10% மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 20% தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பொழுதுபோக்கு பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிசம்பர் 2 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், இதன் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Summary

Chief Minister M.K. Stalin inaugurated the Wonderla Amusement Park, located near Thiruporur, near Chennai, via video conferencing.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in