சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி: யார் அவர்? பின்னணி என்ன?

தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள எம்.எம். ஸ்ரீவஸ்தவா மார்ச் 5 அன்று ஓய்வு பெறவுள்ளார்.
Sushrut Arvind Dharmadhikari
சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி
2 min read

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை (Sushrut Arvind Dharmadhikari) நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவெடுத்துள்ளது.

தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள எம்.எம். ஸ்ரீவஸ்தவா மார்ச் 5 அன்று ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

யார் இந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி? (Sushrut Arvind Dharmadhikari)

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 1966, ஜூலை 8-ல் பிறந்தவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் சட்டம் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1992-ல் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார் தர்மாதிகாரி. 2000 முதல் 2015 வரை ஐடி துறை மற்றும் ரிசர்வ் வங்கிக்காக மத்திய அரசின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். மேலும் மத்திய கலால் வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூத்த சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல ஆணையராகப் பணியாற்றினார். இழப்பீடு மற்றும் மருத்துவ உதவிகளுக்காகப் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தினார்.

விபத்திலிருந்து தப்பியவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளுக்காக நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டாவது பேரழிவு ஏற்படக்கூடாது. சட்டமும் தொழில்நுட்பமும் அவர்களுக்காக வேகமாக இயங்க வேண்டும் என்று வலுவான கருத்துகளை தர்மாதிகாரி முன்வைத்தார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மருத்துவப் பதிவுகளும் இழப்பீடு விவரங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன.

2016-ல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் ீ திபதியாக நியமிக்கப்பட்டு பிறகு மார்ச் 17, 2018 முதல் அப்பதவியில் நிரந்தமாக்கப்பட்டார். கடந்தாண்டு ஏப்ரல் முதல் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார்.

வரி விலக்கு கோரும் தொண்டு அறக்கட்டளைகளின் செயல்பாடுகளையும் அவர் விசாரணை செய்துள்ளார். ஒரு மருத்துவக் கல்லூரி தொடர்புடைய வழக்கில், தொண்டு நிறுவனம் என்கிற அந்தஸ்தைக் கோரும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உண்மையிலேயே பொதுமக்களுக்கு சேவை செய்கின்றனவா என்பதை விசாரித்த அமர்வில் தர்மாதிகாரியும் இடம்பெற்றிருந்தார். மாணவர்களிடம் வசூலிக்கும் கல்விக் கட்டணங்களையும் இந்த அமர்வு கவனமாக விசாரித்தது. லாபம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு தொண்டு நிறுவனம் என்கிற அந்தஸ்தைக் கொண்டு மறைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட கேரள உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். பிறகு தர்​மா​தி​காரி மற்​றும் பி.​வி.​பால​கிருஷ்ணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு, தனி நீதிபதி விதித்த தடையை நீக்​கி, தி கேரளா ஸ்டோரி 2 ​படத்தை வெளியிட அனுமதி வழங்​கியது.

ஓய்வு பெறும் எம்.எம். ஸ்ரீவஸ்தவா கடந்தாண்டு ஜூலை 21 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாகப் பணியமர்த்தப்பட்டார். இதையடுத்து 55-வது தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி பதவியேற்கவுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in