
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று இரவு தொடங்கி, சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மிகக் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.