லூப் லைனில் சென்றதால் திருவள்ளூர் ரயில் விபத்தா?: தெற்கு ரயில்வே விளக்கம்
ரயில் வழித்தடத்தின் மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் சென்றதால் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளாதாக, திருவள்ளூர் ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நேற்று (அக்.12) இரவு சுமார் 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தின் கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த பாக்மதி விரைவு ரயில் ஏற்கனவே அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தடம்புரண்டு விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை மீட்கப்பட்டு, ரயில் வழித்தடத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாக்மதி விரைவு ரயில் லூப் லைனில் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
நேற்று (அக்.11) இரவு, பொன்னேரி-கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் பாக்மதி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தபோது, கவரப்பேட்டை ரயில் நிலையத்தின் மெயின் லைனுக்குள் செல்ல சிக்னல் தரப்பட்டுள்ளது. ஆனால் மெயின் லைனுக்குள் செல்லாமல் தவறுதலாக லூப் லைனுக்குள் பாக்மதி ரயிலை செலுத்தியுள்ளார் அதன் ஓட்டுனர்.
இதனால் ஏற்கனவே லூப் லைனில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பாக்மதி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துள்ளானதாக, இந்த ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (அக்.12) காலை விளக்கம் அளித்துள்ளது.