யூடியூபர் சித்து மீது புகார்: காரணம் என்ன?

தனது சேனலில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து காணொளிகளை வெளியிட்டு வருவதாகக் கூறி...
யூடியூபர் சித்து மீது புகார்
யூடியூபர் சித்து மீது புகார்

பிரபல யூடியூபர் சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசனை நேற்று மதுரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அதே தினத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பலரும் இதேபோல செய்து வருவதாகவும், வாசன் மட்டும் தான் இவ்வாறு செய்தாரா? எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு செல்போன் பேசியப்படி காரை ஓட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், தனது சேனலில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து காணொளிகளை வெளியிட்டு வருவதாகவும் கூறி யூடியூபர் சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சித்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞர் ஷெரின் புகார் அளித்துளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in