விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மும்முரமாக நடைபெறும் வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 30 % வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மும்முரமாக நடைபெறும் வாக்குப்பதிவு
1 min read

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ல் உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 30 % வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிமுகவும், தேமுதிகமும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.

வாக்குப்பதிவு தொடங்கியதும் முக்கிய வேட்பாளர்களான அன்னியூர் சிவா, சி. அன்புமணி, அபிநயா ஆகியோர் தங்களது வாக்குப்பதிவு மையங்களில் வாக்களித்தனர்.

மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,20,040 பெண் வாக்காளர்கள், 1,16,962 ஆண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.

விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் காலியாக இருக்கும் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in