நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துதான் பழக்கம். நம்மை நம்பி களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்
2026 ஒரு புதிய அரசியல் களத்தின் ஒரு புத்தாண்டு. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
பிளவுவாத அரசியல் செய்கிறவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை எதிரி.
திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் நம் அடுத்த எதிரி.
பச்சைத் தமிழர் காமராஜர் வழியில் தமிழக வெற்றிக் கழகம் செயல்படும்: விஜய்
பெரியார் என்றதும் ஒரு கூட்டம் கதறத் தொடங்கியது. பெரியாருடையக் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. பெரியார் கொள்கைகளில் இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மற்றபடி, பெரியாரின் சமத்துவம், பெண் கல்வி உள்பட அனைத்துக் கொள்கைகளையும் ஏற்கிறோம். - விஜய்
தவெக தலைவர் விஜய்-க்கு வீரவாள் வழங்கப்பட்டது!
ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்
மதுரையில் தலைமைச் செயலகக் கிளை அமைக்கப்படும்
கொள்கைப் பிரகடனத்தைத் தொடர்ந்து செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மொழியே ஆட்சிமொழி, வழிபாட்டு மொழி, வழக்காடு மொழி - தவெக கொள்கை
அனைவரையும் சமமாகப் பார்க்கும் மதச்சார்பின்மைக் கொள்கை கடைபிடிக்கப்படும் - தவெக கொள்கை
விகிதாசாரம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதே சமூக நீதி - தவெக கொள்கை
மக்கள் அனைவரும் பிறப்பால் சமம் என்பது கோட்பாடு என பேராசிரியர் சம்பத் குமார் பேச்சு!
பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் அரசியல் வழிகாட்டிகள் - கொள்கைப் பாடலில் விஜய்!
தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தி வருகிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உறுதிமொழி தொடங்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வீரத்தை எப்போதும் போற்றுவோம்.
மொழிப்போர் தியாகிகளின் வீரத்தை எப்போதும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவத்தைப் பேணிக் காப்போம்.
மக்களாட்சி, சமூக நீதி பாதையில் பயணிப்போம்.
அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன்.
சாதி, மத, இன வேறுபாடுகளைப் பார்க்காமல் வேற்றுமைகளைக் களைந்து பணியாற்றுவோம்.
தமிழக வெற்றிக் கழக உறுதிமொழியை கட்சிப் பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க, தொண்டர்கள் உறுதிமொழியை ஏற்கிறார்கள்.
மாநாட்டு மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது.
மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய்!
மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகள் படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொண்டர்களின் பெரும் ஆரவாரம் மற்றும் உற்சாகத்துக்கு மத்தியில் ராம்ப் வாக்கை நிறைவு செய்து மேடையை வந்தடைந்தார் விஜய்.
தொண்டர்கள் வீசும் கட்சித் துண்டுகளை தோளில் அணிந்தபடி நடைபாதையில் நடந்து சென்றார் விஜய்.
தொண்டர்கள் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக நடைபாதையில் கையசைத்தபடி தொண்டர்களை வரவேற்றார் விஜய்.
தவெக தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்துள்ளார்...
மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் மாலை 4.30 மணியளவில் கட்சிக் கொடியேற்றுகிறார் விஜய்.
கடந்த பிப்ரவரி 2-ல் கட்சி தொடங்கியதாக அறிவிப்பு வெளியானது முதல் வி. சாலை மாநாடு வரை..
"நண்பர் விஜய் எனக்கு ரொம்ப வருட நண்பர். சிறிய வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். என்னுடைய முதல் படத்தை அவரை வைத்துதான் நான் தயாரித்தேன். நீண்டகால நண்பர். அவருடையப் புதிய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மாநாட்டில் அரங்கேறி வருகின்றன.
நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஷாந்தனு, விமல், பாடலாசிரியர் விவேக், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் விஜயின் மாநாட்டுக்கு எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் காலை முதல் வருகை தரத் தொடங்கியதால், அவர்களைக் காக்க வைக்க வேண்டாம் என முன்கூட்டியே மாநாட்டைத் தொடங்கியுள்ளார்கள்.