தவெக பொதுக்குழு: 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் தொடங்கியுள்ளது.
தவெக பொதுக்குழு: 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
1 min read

இருமொழிக் கொள்கை, டாஸ்மாக் முறைகேடு, தொகுதி மறுசீரமைப்பு, பரந்தூர் விமான நிலையம் போன்ற 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் தொடங்கியுள்ளது. தவெக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட 2,000 பேர் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளார்கள்.

தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள 17 தீர்மானங்கள்:

1. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

2. மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.

3. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.

4. இருமொழிக் கொள்கையில் உறுதி.

5. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.

6. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

7. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.

8. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.

9. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான திமுக அரசுக்கு கண்டனம்.

10. டாஸ்மாக் ரூ. 1000 கோடி முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

11. சமூக நீதியை நிலை நிறுத்த, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.

12. இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்பு ஒரே தீர்வு.

13. பன்னாட்டு அரங்குக்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக.

14. கொள்கைத் தலைவர்கள் வழியில் பயணிப்போம்.

15. தலைவருக்கே முழு அதிகாரம்.

16. கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

17. கழகத்துக்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல் வீரர்களுக்கு இரங்கல்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in