
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். தமிழகத் தொழில்துறை நசிந்து போய்விடாமல் பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% இறக்குமதி வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் பின்னலாடைத்துறை இதனால் ஸ்தம்பித்துள்ளது. திருப்பூரில் மட்டும் ரூ. 15,000 கோடி வருவாய் இழப்பும் 2 லட்சம் பேருக்கு வேலை இழப்பும் ஏற்படும் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் டிரம்பின் 50% வரி விதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.