தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை விஜய்: பிரசாந்த் கிஷோர்

"தவெக அரசியல் கட்சி அல்ல. அதுவோர் இயக்கம்."
தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை விஜய்: பிரசாந்த் கிஷோர்
2 min read

விஜய் அரசியல் தலைவரல்ல, அவர் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள பாயிண்ட்ஸ் ஷெரட்டனில் இன்று (பிப்.26) காலை 10 மணியளவில் தொடங்கியது.

விழா மேடைக்கு, தவெக தலைவர் விஜய்யுடன் பிரபல அரசியல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் வருகை தந்தார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

இந்த விழாவில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

"வணக்கம். மோடியும் இவ்வளவுதான் தமிழில் பேசுவார். தமிழ்நாட்டுக்கு வந்து வணக்கம் சொல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு தலைவருக்கும் தெரியும். தமிழர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

பிரசாந்த் கிஷோருடன் கைக்கோர்த்தால் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார்கள். இந்தக் கைக்கோர்ப்பு என்ன தாக்கத்தை உண்டாக்கும் என நிறைய பேர் கவலையில் உள்ளார்கள்.

உங்களில் பலருக்கும் இந்தக் கைக்கோர்ப்பு வலு சேர்க்குமா என்ற சிந்தனை இருக்கலாம். தொடக்கத்திலேயே சொல்கிறேன். உங்களுடைய வெற்றிக்கும் அல்லது நீங்கள் இறுதியாகப் பெறும் முடிவுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இவை அனைத்தும் நீங்கள் என்ன செய்கிறீர்கள், உங்களுடைத் தலைவர் என்ன செய்கிறார், தவெக தொண்டர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் இது உள்ளது.

பிறகு நான் ஏன் இங்கு வந்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் துறையில் நான் பணியாற்றவில்லை. கடைசியாக நான் பணியாற்றியது 2021-ல் தான். அது தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பணியாற்றியது. அத்துடன் நான் ஓய்வு பெற்றுவிட்டேன்.

நான் தேர்தல் யுத்திகளை வகுப்பதற்காக இங்கு வரவில்லை. உங்களுக்கு என்னுடைய யுத்திகள் தேவையில்லை. என் சகோதரர், நண்பர் விஜய்-க்கு உதவுவதற்காக நான் இங்கு வரவில்லை. அவருக்கு என் உதவி தேவையில்லை. என்னுடைய அறிவிப்பு என்பது எந்தவொரு தலைவருடனும் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்பது தான். என்னைப் பொறுத்தவரை விஜய் ஓர் அரசியல் தலைவரல்ல. அவர் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை. அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். தவெக அரசியல் கட்சி அல்ல. அதுவோர் இயக்கம். ஒரு புதிய அரசியல் மாற்றத்தைப் பார்க்க வேண்டும் என்ற லட்சணக்கானவர்கள் சேர்ந்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்.

30, 35 ஆண்டுகளாகப் பார்த்தது வரை போதும். மாற்றத்துக்கான நேரம். விஜய் தலைமையிலான தவெக இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

அடுத்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற நான் உதவினால், தமிழ்நாட்டில் யார் மிகவும் பிரபலமானவராக இருப்பார்? ஒவ்வொரு முறையும் சென்னை சூப்பர் கிங்ஸை வெற்றி பெறச் செய்யும் என் சக பிஹாரி எம்எஸ் தோனியா அல்லது பிரசாந்த் கிஷோரா? தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பிஹாரியாக நான் இருக்க வேண்டும். எனவே, தோனியுடன் நான் போட்டியிட வேண்டியுள்ளது. தவெகவை நான் வெற்றி பெறச் செய்கிறேன்.

அடுத்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்போது, இருபுறமும் அமர்ந்து இருக்கும் உங்களில் பலர் உங்களுடையத் தலைவரின் தலைமையின் கீழ் சட்டம் இயற்றுபவர்களாக மாறுவீர்கள். அப்போது நன்றி தெரிவிப்பதற்கான உரையாற்ற வருவேன். அதை தமிழில் ஆற்றுவேன். தமிழ் மொழியில் பேசி, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன்" என்றார் பிரசாந்த் கிஷோர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in