எம்.ஜி.ஆருக்கு நிகர் என்னுடைய அண்ணன் விஜயகாந்த்: விஜய் புகழாரம் | TVK Vijay | Madurai

இந்த மதுரை மண்ணைச் சேர்ந்த அவரை மறக்க முடியுமா?
எம்.ஜி.ஆருக்கு நிகர் என்னுடைய அண்ணன் விஜயகாந்த்: விஜய் புகழாரம் | TVK Vijay | Madurai
1 min read

எம்.ஜி.ஆருக்கு நிகரான குணம்கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் என்று தவெக 2-வது மாநில மாநாட்டில் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநில மாநாட்டில் விஜய் பேசியதாவது,

`மதுரை என்றாலே சீறிப் பாய்ந்து துள்ளிக்குதிக்கும் யாருக்கும் அடங்காத காளைகள் விளையாடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நம்முடைய வைகை ஆறு, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மீனாட்சி அம்மன்.

இது உணர்வுப்பூர்வமான மண், இந்த மக்களும் உணர்வுப்பூர்வமானவர்கள்தான். இந்த மண்ணில் நான் காலடி எடுத்து வைத்ததும் ஒரே ஒருவரை பற்றிதான் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அவர் யார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி நமக்கு மிகவும் பிடித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான் அது. அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் அவரைப்போலவே குணம்கொண்ட என்னுடைய அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்துடன் பழக எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான். அவரை மறக்க முடியுமா? உணர்வுப்பூர்வமான மக்களுக்கு மிகப்பெரிய அடையாளம்தான் இந்த மதுரை மண்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in