முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் நியமனம்

எம்.எஸ். ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முறையே முதல்வரின் செயலாளர் (2), செயலாளர் (3) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் நியமனம்
1 min read

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச் செயலாளராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வரின் தனிச் செயலாளராக இருந்த முருகானந்தம் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனால், முதல்வரின் செயலாளர் பொறுப்புகளிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, முதல்வரின் செயலாளர் (1) ஆக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முறையே முதல்வரின் செயலாளர் (2), செயலாளர் (3) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in