அதிமுகவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் ஈபிஎஸ்தான்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் | Udhayanidhi | EPS |

அதிமுக ஆம்புலன்ஸில் போய் ஐசியுவில் அனுமதிக்கப்படும் காலம் வரும் எனவும் பேச்சு...
கோப்புப்படம்
கோப்புப்படம்https://x.com/Udhaystalin
1 min read

அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமிதான் நிரந்தர பொதுச்செயலாளர் ஆக இருந்தால்தான் எங்கள் வேலை சுலபமாகும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு தொகுதியில் நிர்வாகிகளுடன் நேற்று (செப். 9) ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது :

”கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தபோது ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் பிரச்னை செய்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தலைவராக இருக்கும் ஒருவர் இப்படிச் செய்யலாமா? ஆம்புலன்ஸை நிறுத்தி பிரச்சாரம் செய்யும் அதிமுகவே விரைவில் பாஜகவின் அறுவை சிகிச்சை காரணமாக ஆம்புலன்ஸில் செல்லும் காலம் வரும். அதிமுகவே ஐசியுவில்தான் உள்ளது. கடைசியாக அதிமுகவைக் காப்பாற்றவும் எங்கள் தலைவர் ஸ்டாலின்தான் வருவார்.

இதற்கிடையில் என்னை அவர் ஆம்புலன்ஸில் ஏற்றி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுகிறார். நான் முழு மனத்துடன் சொல்கிறேன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் 100 ஆண்டு காலம் நல்ல உடல் நலத்தோடும் மன நலத்தோடும் வாழ வேண்டும். அதிமுகவுக்கு நிரந்தர பொதுச்செயலாளராக நீங்கள்தான் இருக்க வேண்டும். அதுதான் நீங்கள் தமிழ்நாட்டுக்குச் செய்ய முடிந்த நல்லது. உங்களால்தான் அந்த இயக்கத்தை வழிநடத்த முடியும். அந்தத் தகுதி உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அப்போதுதான் எங்கள் வேலை சுலபமாகும். இதை அதிமுகவினர் ஒத்துக் கொள்வார்களா எனத் தெரியவில்லை. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

Udhayanidhi | EPS | TN Politics | DMK | ADMK | Edappadi Palaniswami |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in