மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி இன்று தொடங்கி அக். 24 வரை சென்னை உள்பட 4 நகரங்களில் நடைபெறுகிறது.
முன்னதாக மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற 33,000 பேர் மாநில அளவிலான போட்டிகளில் மாவட்ட வாரியாக பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்போட்டிகளைத் தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இதில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர் பாபு, சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.