அக்டோபர் 27-ல் தவெகவின் முதல் மாநில மாநாடு: விஜய்

இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்கள் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ல் நடைபெறும் என கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிப் பாடலை வெளியிட்டார். கட்சியின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என விஜய் தெரிவித்திருந்தார்.

இதன்பிறகு, மாநாட்டுக்கு அனுமதி கோரும் பணிகள் தொடங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 அன்று மாநாட்டை நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் விழுப்புரம் காவல் துறையிடம் மனு அளித்தார். இதுதொடர்பாக, புஸ்ஸி ஆனந்திடம் மாநாடு தொடர்பான 21 கேள்விகளை எழுப்பி அவற்றுக்குப் பதிலளிக்குமாறு விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து தவெக சார்பில் விழுப்புரம் மாவட்டக் காவல் துறையிடம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு, மாநாட்டை நடத்துவதற்காக நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இருந்தபோதிலும், குறுகிய காலமே இருப்பதால் அதற்குள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் சிரமம் இருப்பதாக தவெக கருதியதாகத் தெரிகிறது. இதனால், தவெகவின் முதல் மாநில மாநாட்டை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், அக்டோபர் 27 அன்று கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேவுள்ள வி. சாலை கிராமத்தில் மாலை 4 மணியளவில் மாநாடு நடைபெறவுள்ளதாக விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்கள் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளதாவது:

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in