கோப்புப்படம்
கோப்புப்படம்

வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலை: நிதிநிலை அறிக்கை குறித்து விஜய் விமர்சனம்

தமிழக மக்களின் நலன்களை மறந்துவிட்டு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கை.
Published on

பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே நிதிநிலை அறிக்கை இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

2025-26-ம் நிதியாண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 2026-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தங்களுடைய ஆட்சியில் தாக்கல் செய்த கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்துள்ளன. இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகமும் நிதிநிலை அறிக்கை குறித்து விமர்சனத்தை வைத்துள்ளது.

மக்களைப் பற்றி கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த நிதிநிலை அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

தவெக தலைவர் விஜயின் விமர்சனப் பார்வை:

logo
Kizhakku News
kizhakkunews.in