திருச்சியில் நடிகர் விஜய் முதல் பரப்புரை: தொண்டர்கள் குவிந்ததால் கால தாமதம் | TVK Vijay |

விமான நிலையம் பகுதியில் ரசிகர்கள் குவிந்ததால் குறித்த நேரத்தில் பரப்புரையைத் தொடங்குவதில் சிக்கல்...
திருச்சியில் நடிகர் விஜய் முதல் பரப்புரை: தொண்டர்கள் குவிந்ததால் கால தாமதம் | TVK Vijay |
1 min read

திருச்சியில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது முதல் பிரசாரத்தை இன்று தொடங்கும் நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் இன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். டிசம்பர் 20-ல் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

முதற்கட்டமாக திருச்சியில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய், திருச்சியில் மரக்கடை பகுதியில் பேசுகிறார். திருச்சியைத் தொடர்ந்து மட்டும் பெரம்பலூர் மற்றும் அரியலூரில் பிரசாரம் செய்கிறார். இதற்கிடையில் விஜயின் பிரசாரத்துக்காக பிரத்யேக வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், கொள்கை தலைவர்கள் படம், எம்ஜிஆர் மற்றும் அண்ணா புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

திருச்சியில் விமான நிலையத்திற்கு வந்த விஜய் பிரசார வாகனத்தின் ஏறிய பின், அவர் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்ட இடத்திற்குச் செல்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் பகுதியில் இருந்தே தொண்டர்கள் வழி நெடுக குவிந்ததால், திட்டமிட்ட நேரத்திற்கு விஜய் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக விஜய்யின் பரப்புரைக்குக் காவல்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. குறிப்பாக இன்று (செப். 13) காலை 10:35 முதல் 11:00 மணிக்குள் விஜய் பரப்புரை செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்வதால் கால தாமதம் ஆகி வருகிறது.

TVK Vijay | Vijay | Vijay Tour | Tamilaga Vettri Kazhagam |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in