யுபிஎஸ்சி தேர்வில் பெரியாருக்கு சாதி சாயம் பூச முயற்சி: விஜய் குற்றச்சாட்டு!

சாதி, மதம் போன்றவற்றை வைத்து பிரிவினையை வளர்க்க நினைக்கும் சிந்தனை பக்கம் சென்றுவிடவேண்டாம்.
யுபிஎஸ்சி தேர்வில் பெரியாருக்கு சாதி சாயம் பூச முயற்சி: விஜய் குற்றச்சாட்டு!
1 min read

யுபிஎஸ்சி மத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தந்தை பெரியாருக்கு சாதி சாயம் பூசுவதைப்போல ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்ததை வன்மையாகக் கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (மே 30) காலை தொடங்கியது.

500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்வின் தொடக்கத்தில் விஜய் பேசியதாவது,

`முக்கியமான ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். சாதி, மதம் போன்றவற்றை வைத்து பிரிவினையை வளர்க்க நினைக்கும் சிந்தனை பக்கம் சென்றுவிடவேண்டாம். அந்த சிந்தனை உங்களையும், உங்கள் மனதையும் தொந்தரவு செய்யும் அளவுக்கு அதை அனுமதிக்காதீர்கள்.

விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா பொருட்களை விளைய வைக்கின்றனர்? தொழிலாளர்கள் என்ன சாதி, மதம் பார்த்தா பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்? அவ்வளவு ஏன், இயற்கையின் அம்சங்களான வெயில், மழையில் சாதி இருக்கிறதா அல்லது மதம் இருக்கிறதா?

போதை பொருட்களை நாம் அறவே ஒதுக்கி வைப்பதைப்போல, இந்த சாதி மதத்தையும் கட்டாயம் வெகு தூரம் ஒதுக்கி வைக்கவேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் நல்லது. அண்மையில் பார்த்தோமேயானால் தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்தார்கள்.

மத்திய சிவில் சர்வீஸ் (யுபிஎஸ்சி) தேர்வில்கூட சாதி சாயம் பூசுவதைப்போல ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்கள். இதை எல்லாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த உலகில் எது சரி, எது தவறு என்பதைப் பகுப்பாய்வு செய்து பார்த்தாலேபோதும், குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கையை வாழலாம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in