தவெகவின் விருப்பச் சின்னங்கள் என்னென்ன? | TVK Vijay | Vijay |

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் தில்லி சென்றுள்ளதாகத் தகவல்.
TVK submits request to Election Commission for shortlisted symbols
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
1 min read

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பொதுச் சின்னத்தை ஒதுக்கக்கோரி முறையிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகத் தேர்தலில் களம் காண்கிறது. இதுவரை தவெகவுடன் கூட்டணி வைப்பது குறித்து எந்தக் கட்சியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தவெகவும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எனவே, கூட்டணிக்கு யாரும் வராவிட்டால், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக நேரடியாகக் களம் காண நேரிடும்.

இதையொட்டி, தங்களுடைய கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்கக் கோருவது தொடர்பாக தவெக நிர்வாகிகள் தில்லி சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெகவின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், தங்களுக்கு விருப்பமான சின்னங்களின் பட்டியலைக் கொண்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தவெக சார்பில் இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் 10 விருப்பச் சின்னங்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது. விசில், கிரிக்கெட் பேட், ஆட்டோ, சாம்பியன் கோப்பை உள்பட 10 சின்னங்களைக் குறிப்பிட்டு அவற்றின் மாதிரிகளையும் வரைந்து சமர்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் ஏதேனும் ஒரு பொதுச் சின்னத்தைத் தங்களுடைய கட்சிக்கு ஒதுக்குமாறு தில்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தவெக குறிப்பிட்டுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Summary

Vijay’s political party, Tamilaga Vettri Kazhagam (TVK), has requested the Election Commission of India to allocate any of the symbols shortlisted by the party

Tamilaga Vettri Kazhagam | TVK Vijay | TVK | TVK Election Symbol | Election Commission |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in