புதுச்சேரியில் விஜய் சாலைவலம்: அனுமதி கோரி தவெகவினர் மனு | TVK Vijay |

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு வழங்க தவெகவினர் கோரிக்கை...
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
1 min read

புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 5 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சாலைவலம் மேற்கொள்ள தவெகவினர் அனுமதி கோரியுள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு, பரப்புரை ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

குறிப்பாக கடந்த செப்டம்பர் 27 அன்று அவர் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய் தனது பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதற்கிடையில் கடந்த நவம்பர் 5 அன்று தவெக சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதில் விஜய் பங்கேற்றார்.

அதன்பின் டிசம்பர் 4 அன்று சேலத்தில் பிரசாரத்தை மீண்டும் தொடங்க தவெக சார்பில் சேலம் காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் அன்று கார்த்திகை தீபத் திருவிழா நடப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாததால் காவல்துறை அனுமதி மறுத்தது. இதனிடையே, கடந்த நவம்பர் 23 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரத்தில் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் உள்ளரங்கு கூட்டமாக பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில், 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்ததாக புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5 அன்று விஜய் சாலைவலம் மேற்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் அனுமதி கோரி காவல்துறை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ”தவெக தலைவர் விஜய், சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக சாலைவலம் வந்து மக்களைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது கீழ் கண்ட இடத்தில் ஒலிப் பெருக்கியின் மூலமாக உரையாட உள்ளார். ஆகையால் இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சாலைவலம் காலை 9 முதல் மாலை 5 வரை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Summary

The TVK executives have requested permission for TVK leader Vijay to hold a roadshow in Puducherry on December 5.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in