ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து கட்சித் தலைவர் விஜய் அரசியல் தலைவர்கள், நாட்டு மக்களுக்குத் தவறாமல் வாழ்த்துகளைக் கூறி வருகிறார். பக்ரீத், ரமலான் பண்டிகைகளுக்கு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து கூறியிருந்தார். ஓணம் பண்டிக்கையை ஒட்டி கேரள மக்களுக்கு வாழ்த்து கூறியிருந்தார்.
ஆனால், இடையில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை. இதனால், ஹிந்துக்கள் பண்டிகையைப் புறக்கணிப்பதாக விஜய் மீது விமர்சனங்கள் எழுந்தன. அண்ணா, பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியதும், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவருடையத் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதும் கூடுதல் கவனம் பெற்றது.
திராவிட அரசியல் கலாசாரத்தை விஜய் கையிலெடுப்பதாக பாஜக சார்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமிக்கு விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.