தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றினார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் காலை முதல் வருகை தரத் தொடங்கியதால், அவர்களைக் காக்க வைக்க வேண்டாம் என முன்கூட்டியே மாநாடு தொடங்கப்பட்டது.
முன்னதாக, நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஷாந்தனு, விமல், சசி குமார் பாடலாசிரியர் விவேக், இயக்குநர்கள் சீனு ராமசாமி, மகிழ் திருமேணி உள்பட பலரும் விஜயின் மாநாட்டுக்கு எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டர்கள் வீசும் கட்சித் துண்டுகளை தோளில் அணிந்தபடி நடைபாதையில் நடந்து சென்ற விஜய், மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.