விஜய் சுற்றுப்பயணம்: தொண்டர்களுக்கு என். ஆனந்த் விதித்த கட்டுப்பாடுகள்! | TVK Vijay |

திருச்சியைத் தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் காவல் துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://x.com/TVK_Thanjai/status
1 min read

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொண்டர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 12 முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் தொடங்கும் இந்தப் பயணம் டிசம்பர் 20-ல் மதுரையில் நிறைவடைகிறது. திருச்சியில் மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை அருகே பிரசாரத்தைத் தொடங்குகிறார் விஜய்.

திருச்சியைத் தொடர்ந்து, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்குச் செல்கிறார். திருச்சியைத் தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் காவல் துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளுடன் விஜய் பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக தொண்டர்களுக்கு 12 அம்ச கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த்.

  • விஜயின் வாகனத்தைப் பின்தொடர வேண்டாம்.

  • கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டாம்.

  • விஜய் வருகை உள்ளிட்டவற்றின்போது, பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும்.

  • போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

  • பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

  • சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

  • கட்டடங்கள், சுவர்கள், மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை சுற்றியுள்ள கிரில் கம்பிகள், தடுப்புகள் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • ஃபிளெக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

  • ஆம்புலன்ஸ், பொது மக்கள், வாகன ஓட்டிகள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்படாமல் கலந்துகொள்ள வேண்டும்.

  • காவல் துறை விதிகளுக்கு உள்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.

  • விஜயின் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.

முழு விவரம்

TVK Vijay | TVK Anand | N Anand | N. Anand |  Tamilaga Vettri Kazhagam | Vijay Tour | TVK Vijay Tour |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in