டிசம்பர் 20 வரை சுற்றுப்பயணம்: விஜயின் திட்டம் வெளியானது! | TVK Vijay |

அக்டோபர் 5 ஞாயிற்றுக்கிழமை தவிர, சனிக்கிழமைகளில் மட்டுமே மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.
டிசம்பர் 20 வரை சுற்றுப்பயணம்: விஜயின் திட்டம் வெளியானது! | TVK Vijay |
1 min read

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயின் இந்தப் பயணம் திருச்சியில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தரப்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

திருச்சியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல் துறையிடமிருந்து இருமுறை அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதிகோரி காவல் துறை இயக்குநரைச் சந்தித்து மனு அளிக்கிறார் பொதுச்செயலாளர் என். ஆனந்த்.

காவல் துறை இயக்குநரிடம் தாக்கல் செய்துள்ள மனு மூலம், விஜயின் சுற்றுப்பயணத் திட்டத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 13-ல் திருச்சியில் தொடங்கும் விஜயின் சுற்றுப்பயணம், டிசம்பர் 20-ல் மதுரையில் நிறைவடைகிறது.

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது, அந்தந்த இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், சம்பந்தப்பட்ட இடங்களில் போக்குவரத்தை முறைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என என். ஆனந்த் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் சுற்றுப்பயணத் திட்டம்

  • செப்டம்பர் 13 (சனிக்கிழமை) - திருச்சி, பெரம்பலூர், அரியலூர்

  • செப்டம்பர் 20 (சனிக்கிழமை) - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை

  • செப்டம்பர் 27 (சனிக்கிழமை) - திருவள்ளூர், வடசென்னை

  • அக்டோபர் 4 (சனிக்கிழமை) - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

  • அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை) - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

  • அக்டோபர் 11 (சனிக்கிழமை) - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி

  • அக்டோபர் 18 (சனிக்கிழமை) - காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை

  • அக்டோபர் 25 (சனிக்கிழமை) - தென் சென்னை, செங்கல்பட்டு

  • நவம்பர் 1 (சனிக்கிழமை) - கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர்

  • நவம்பர் 8 (சனிக்கிழமை) - திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்

  • நவம்பர் 15 (சனிக்கிழமை) - தென்காசி, விருதுநகர்

  • நவம்பர் 22 (சனிக்கிழமை) - கடலூர்

  • நவம்பர் 29 (சனிக்கிழமை) - சிவகங்கை, ராமநாதபுரம்

  • டிசம்பர் 6 (சனிக்கிழமை) - தஞ்சாவூர், புதுக்கோட்டை

  • டிசம்பர் 13 (சனிக்கிழமை) - சேலம், நாமக்கல், கரூர்

  • டிசம்பர் 20 (சனிக்கிழமை) - திண்டுக்கல், தேனி, மதுரை

TVK Vijay | TVK | Tamilaga Vettri Kazhagam | Vijay Tour | TVK Vijay Tour | Police Permission | N Anand |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in