உறுதிமொழி பிடித்திருந்தால், கட்சியில் இணையுங்கள்: விஜய் அழைப்பு

ஒரே நேரத்தில் ஏராளமானோர் கட்சியில் சேர முயன்றதால், செயலி முடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உறுதிமொழி பிடித்திருந்தால், கட்சியில் இணையுங்கள்: விஜய் அழைப்பு
படம்: https://twitter.com/tvkvijayhq

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராகச் சேர்வதற்கானப் பிரத்யேக செயலியை நடிகரும், கட்சியின் தலைவருமான விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார்.

உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகம் செய்வதற்காக அவர் விடியோவை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் ஆப், டெலிகிராம், இணையப் பயன்பாட்டாளர்கள் என ஒவ்வொரு தளங்களிலும் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் ஏராளமானோர் கட்சியில் சேர முயன்றதால், செயலி முடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் உறுதிமொழியைப் படித்து பிடித்திருந்தால் கட்சியில் இணையலாம் என விஜய் அந்த விடியோவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in