சாலையில் செல்பவர்களை எல்லாம் கூட்டணியில் இணைத்துக் கொண்டிருக்கிறது திமுக: டிடிவி தினகரன் | DMK | AMMK |

வேறு வேறு கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இணையவில்லையா?
"DMK responsible for these deaths": AMMK's Dhinakaran on Kallakurichi hooch tragedy
சாலையில் செல்பவர்களை எல்லாம் கூட்டணியில் இணைத்துக் கொண்டிருக்கிறது திமுக: டிடிவி தினகரன்
1 min read

சாலையில் செல்பவர்களை எல்லாம் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டிருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணிக்க அரசு முறைப் பயணமாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தந்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். அதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விரைவாகவும் சுமுகமாகவும் முடிவடையும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்று கேட்டால் எந்தக் கூட்டணியும் பலம்பெறுவது சிறப்பாக அமையும். புதிய கட்சிகள் ஒரு கூட்டணியில் இணைந்து பலப்படுவது என்பது சிறப்பான விஷயம் என்றுதான் சொல்ல முடியும்.

திமுகவில் காலாவதி ஆனவர்கள்

திமுகவைப் பாருங்கள், ஓடி வருபவர்கள், சாலையில் செல்பவர்கள், தபால் போட வருபவர்கள், உணவு கொடுக்க வருபவர்கள் போன்றவர்களை எல்லாம் கூட்டணிக்குள் இணைத்து இடம் கொடுக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பதவிகள் பெற்று, பொருளாதார வளர்ச்சி அடைந்து, இப்போது காலாவதி ஆனவர்களை திமுகவில் இணைத்திருக்கிறார்கள். அவர்கள் இப்படி செயல்படும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி பலப்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்

தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதைப் பற்றியதுதான். அதுதான் ஒரே நோக்கம். மற்றபடி, ஒரே கொள்கை கொண்டவர்களாக இருந்தால் ஒரே கட்சியில் இருந்திருப்பார்கள். ஏன், வேறு வேறு கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இணையவில்லையா? விஜய் கூட்டணிக்கு வருவாரா என்றால், அதைப் பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், தில்லியில் உள்ள பாஜக தலைவர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.” என்றார்.

Summary

AMMK General Secretary TTV Dinakaran criticized the DMK for including everyone on the road in the alliance.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in