பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் கைது!

ஏற்கெனவே, டிடிஎஃப் வாசனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.
டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசனை மதுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி அதை யூடியூபில் பதிவிட்டு அதன் மூலம் பல ரசிகர்களைக் கொண்டவர் டிடிஎஃப் வாசன்.

ஏற்கெனவே, ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த காரணத்தால் டிடிஎஃப் வாசனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்ற வாசன், மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகவும், அதனை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் பேரில், மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இந்த வழக்கில் கைதான வாசன் மீது ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in