தீபாவளிப் பண்டிகை: ரயில் முன்பதிவு நாளை (ஆக. 16) தொடக்கம்! | Diwali

தீபாவளிப் பண்டிகை: ரயில் முன்பதிவு நாளை (ஆக. 16) தொடக்கம்! | Diwali

பண்டிகையைக் கொண்டாட மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவே தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிடலாம்.
Published on

இந்த வருடம் அக்டோபர் 20 அன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை என்பதால் பண்டிகையைக் கொண்டாட மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை அல்லது வியாழன் அன்றே தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிடுவார்கள்.

இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாள்களுக்கு முன் தொடங்குவதால் அதன் அடிப்படையில் தீபாவளிப் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 17 முதல் அதாவது நாளை முதல் தொடங்கவுள்ளது. அக்டோபர் 16 அன்று ரயிலில் பயணம் செய்யவுள்ளவர்கள் ஞாயிறு காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும். அதேபோல அக்டோபர் 17-க்கான பயணத்துக்கு ஆகஸ்ட் 18 அன்றும் அக்டோபர் 18-க்கான பயணத்துக்கு ஆகஸ்ட் 19 அன்றும் அக்டோபர் 19-க்கான பயணத்துக்கு ஆகஸ்ட் 20 அன்றும் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஊருக்குத் திரும்பி வருபவர்கள் தீபாவளி அன்றே அதாவது அக்டோபர் 20 அன்றே பயணம் செய்ய நினைத்தால் அதற்காக ஆகஸ்ட் 21 அன்று முன்பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 21-க்கான பயணத்துக்கு ஆகஸ்ட் 22 அன்றும் அக்டோபர் 22-க்கான பயணத்துக்கு ஆகஸ்ட் 23 அன்றும் முன்பதிவு செய்ய வேண்டும்.

Diwali | Diwali Reservation | Diwali Booking | Train Booking | Train Reservation | Diwali Train |

logo
Kizhakku News
kizhakkunews.in