
தமிழ்நாட்டில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாள்தோறும் காய்கறிகளின் விலைப் பட்டியல் பதிவு செய்யப்படும். இன்றைய (ஜூலை 22) நிலவரப்படி தக்காளியின் விலை ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 16-க்கும் அதிகபட்சமாக ரூ. 50-க்கும் விற்பனையாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17-ல் ஒரு கிலோ தக்காளியின் விலை
குறைந்தபட்சம் - ரூ. 15
அதிகபட்சம் - ரூ. 42
ஜூலை 18-ல்
குறைந்தபட்சம் - ரூ. 15
அதிகபட்சம் - ரூ. 42
ஜூலை 21-ல்
குறைந்தபட்சம் - ரூ. 18
அதிகபட்சம் - ரூ. 46
ஜூலை 22-ல்
குறைந்தபட்சம் - ரூ. 16
அதிகபட்சம் - ரூ. 50
கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தை வளாகத்தில் தக்காளி ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ. 18-க்கும் அதிகபட்சம் ரூ. 46-க்கும் விற்பனை ஆவதாக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் பதிவிட்டுள்ளது. இவை சில்லறை விற்பனைக்கு வரும்போது, தக்காளி ஒரு கிலோ ரூ. 60 வரை விற்பனையாகும். ஆக, கடந்த வாரத்தைவிட இந்த வாரம் தக்காளியின் விலை குறைந்தபட்சம் ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயர்ந்து விற்பனையாகிறது.
தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால், தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி நடவு செய்துள்ள விவசாயிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 30 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ. 40 முதல் 50 வரை விற்பனையாவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது, தக்காளியின் தேவை அதிகரித்துள்ளது, வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது உள்ளிட்டவை விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் கூறுகிறார்கள்.
Tomato | Tomato Price | Tomato Price hike