நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!

இத்தேர்வை எழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளைநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர் உட்பட 6,244 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 30-ல் வெளியிட்டது.

தேர்வுக்கான விண்ணப்பத்தை இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 28 என அறிவிக்கப்பட்ட நிலையில் இத்தேர்வை எழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வானது நாளை காலை 9.30 மணி முதல் மதியம்12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வு மையத்திற்கு சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளாகத் தேர்வு நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பு அடிப்படையில் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in