கடந்த ஜூன் 13-ல் நடந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.
துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் – வணிகவரி, உதவி இயக்குநர் – ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அதிகாரி உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பைக் கடந்த மார்ச் 28-ல் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 13-ல் காலை 9.30-க்குத் தொடங்கி பிற்பகல் 12.30 வரை முதல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த முதல்நிலைத் தேர்வு முடிவுகளைத் தற்போது வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் 10 தொடங்கி 13 வரை மெயின்ஸ் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செப்.06 முதல் செப்.15 வரை கல்விச் சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளுக்கு: www.tnpsc.gov.in