டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 1ஏ தேர்வு அறிவிக்கைகள் வெளியீடு!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 1ஏ தேர்வு அறிவிக்கைகள் வெளியீடு!

இன்று (ஏப்ரல் 1) தொடங்கி ஏப்ரல் 30 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
Published on

குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுகளுக்கான அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. இன்று (ஏப்ரல் 1) வெளியிட்டுள்ளது.

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆகிய பதவிகளுக்கான 70 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1 (குரூப் 1) தேர்வு அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

அதேபோல, உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான இரு காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1ஏ தேர்வு அறிக்கையும் இன்று வெளியாகியுள்ளது.

இந்த தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள், இன்று (ஏப்ரல் 1) தொடங்கி ஏப்ரல் 30 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதோடு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மே 5 முதல் 7 வரை இணையவழியில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 ஜூன் அன்று, காலை 9.30 தொடங்கி நண்பகல் 12.30 வரை முதல்நிலைத் தேர்வு நடைபெறுவுள்ளது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல் வெளியிடப்படும்.

மேலும் தகவல்களுக்கு: tnpsc.gov.in மற்றும் tnpscexams.in

logo
Kizhakku News
kizhakkunews.in