தமிழ்நாடு முடிவுகள்: 2-வது இடம் யாருக்கு?

இத்தேர்தலில் 2-வது இடம் அதிமுக கூட்டணிக்கா அல்லது பாஜக கூட்டணிக்கா...
தமிழ்நாடு முடிவுகள்: 2-வது இடம் யாருக்கு?
ANI

தமிழ்நாடு/புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியை உள்ளடக்கிய கூட்டணி முதல்முறையாக 40-க்கு 40 என அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருப்பது இதுவே முதல்முறை.

அதேசமயம் இத்தேர்தலில் 2-வது இடம் அதிமுக கூட்டணிக்கா அல்லது பாஜக கூட்டணிக்கா என்கிற ஆவல் வாக்காளர்களிடையே உள்ளது.

இத்தேர்தலில் அதிமுக கூட்டணி 29 தொகுதிகளில் 2-வது இடத்தையும் 8 தொகுதிகளில் 3-வது இடத்தையும் 3 தொகுதிகளில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.

பாஜக கூட்டணி 10 இடங்களில் 2-வது இடத்தையும் 25 இடங்களில் 3-வது இடத்தையும் 4 தொகுதிகளில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.

நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 7 இடங்களில் 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 33 தொகுதிகளில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முதல் இடத்தையும் அதிமுக கூட்டணி 2-வது இடத்தையும் 3-வது, 4-வது இடங்களை முறையே பாஜக கூட்டணியும், நாதக-வும் பிடித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in