சென்னையில் மாபெரும் ‘விளையாட்டு நகரம்’: அரசாணை வெளியீடு | TN Government |

செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் பரப்பளவில் ரூ. 301 கோடி செலவில் உருவாகும் விளையாட்டு நகரம்...
தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
1 min read

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் புதிய விளையாட்டு நகரம் உருவாக்குவது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் பெரிய விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, கடந்த 2022 ஏப்ரல் 21 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, செம்மஞ்சேரி பகுதி தேர்வு செய்யப்பட்டது. செம்மஞ்சேரி பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு அருகில் 105 ஏக்கரில் மாபெரும் விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது.

முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின்போது விளையாட்டு நகரம் அமைப்பதற்கான பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்ளும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதனடிப்படையில் கடந்த ஜூன் 17 அன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான தொழில்நுட்ப - பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையைத் தயார் செய்ய டெண்டர் கோரியது. இதற்கிடையில் செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் நிலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெண்டர் பெற்றுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு விளையாட்டு நகரம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க அனுமதி வழங்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு அதிகாரம் வழங்கி, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் பரப்பளவில் ரூ. 301 கோடி செலவில் இந்த விளையாட்டு நகரம் உருவாகிறது. இதில் நீர் விளையாட்டுகள், துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம், வில்வித்தைத் தளம், கால்பந்தாட்ட மைதானம், வீரர்கள் தங்கும் விடுதிகள், உள் விளையாட்டு அரங்கம், புல்வெளிகள், சாலைகள், மழைநீர் வடிகால் ஆகியவை உலகத் தரத்தில் அமைக்கப்படவுள்ளன.

குறிப்பாக 12.5 மீட்டர் அகலமும் ஒரு கிலோ மீட்டர் நீளமும் உள்ள துடுப்புப் படகுச் சவாரி வசதி இந்த விளையாட்டு நகரத்தில் இடம்பெறவுள்ளது. அதேபோல் குறைந்தபட்சம் 2 மீட்டர் ஆளமும் ஒரு கிலோமீட்டர் நீளமும் கொண்ட கயாகிங் மற்றும் படகுச் சவாரி வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது.

Summary

The Tamil Nadu government has issued a government order regarding the construction of a new sports city in the Semmancheri.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in