2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள எல்காட் ஐடி பூங்காவை நவம்பர் 4 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 4 அன்று கோவைக்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின்போது, விளாங்குறிச்சியில் புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைக்கிறார்.
மேலும், அதே நாளில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
கடந்த 2020-ல் எல்காட் ஐடி பூங்கா குறித்த திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் எல்காட் ஐடி பூங்கா நவம்பர் 4 அன்று திறக்கப்படுகிறது.