சென்னை வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இறுதிக்கட்ட பிரசாரம் (விடியோ)

தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தயாநிதி மாறனைக் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.
சென்னை வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இறுதிக்கட்ட பிரசாரம் (விடியோ)

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்டமாக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த தேர்தல்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in