அக்.14-ல் சட்டப்பேரவை தொடக்கம்: அவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு | TN Assembly |

கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்...
அக்.14-ல் சட்டப்பேரவை தொடக்கம்: அவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு | TN Assembly |
https://x.com/AppavuSpeaker
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் அக்டோபர் 14-ல் தொடங்கும் என்று அவைத்தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரியில் நடைபெற்றது. இரண்டாம் கூட்டம், மார்ச் மாதத்தில் தொடங்கியது. அப்போது 2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து அடுத்த சட்டப்பேரவைக் கூட்டம் எப்போது என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவைத்தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“அக்டோபர் 14-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். அன்றைய தினம் மறைவுற்ற வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி உள்பட எம்எல்ஏக்கள் 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அதைத் தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டு கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும்”

என்று அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in