தமிழக வேளாண் பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதி அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.
தமிழக வேளாண் பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
2 min read

தமிழ்நாடு அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதி அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* 2025-26 நிதியாண்டில் தமிழ்நாடு வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு.

* 100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தியில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரூ. 2 கோடி ஒதுக்கீடு.

* நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்க ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு.

* பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க 'தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை' உருவாக்கப்படும்.

* டெல்டா மாவட்டங்களில் 22 நெல் சேமிப்பு வளாகங்கள். காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 6 நெல் சேமிப்பு வளாகங்கள்.

* விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் பம்ப் செட்டுகள் வழங்கப்படும்.

* ரூ. 8 கோடி ஒதுக்கீட்டில் 50 உழவர் சந்தைகளில் அடிப்பட்டைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.

* ஊரகப் பகுதிகளில் ஏழை மகளிர், நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு

* மின் மோட்டார் பம்பு செட்டுகள் விலையில் அதிகபட்சமாக ரூ. 15,000 வரை மானியம் வழங்கிட ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* பயிர்கள் பெருக்குத் திட்டம் 2 லட்சத்து 50,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.

* பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானிய விலையில் வழங்கப்படும்.

* ரூ. 297 கோடியில் கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

* டிராக்டர், அறுவடை இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவதற்கு ரூ. 1.84 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழ்நாட்டில் உள்ள 2338 கிராம ஊராட்சிகளில் "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்"

* பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க, "தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை"

* புதிய கரும்பு வகைகளை விவசாயிகள் உற்பத்தி செய்திட தேவையான பொருள்களை உழவர்களுக்கு மானிய விலையில் வாங்குவதற்கு ரூ. 10.53 கோடி நிதி ஒதுக்கீடு

* ஊரகப்பகுதிகளில் 360 நாட்டுக் கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில்முனைவோராக உயர்த்துவதற்கு (CM ARISE) ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு.

* உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

* மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் 79,000 உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 40.27 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 9,36,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 269.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* 63,000 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

* அரசு விதை பண்ணைகள் மற்றும் உழவர்களின் நிலங்களில் விதை பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யும் திட்டத்திற்கு ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான "டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in