
சென்னை எண்ணூரிலிருந்து டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் சரக்கு ரயில் இன்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூர் அருகே தீவிபத்துக்குள்ளானது. முதலில் ஒரு டேங்கரில் தீ பற்றியுள்ளது. பிறகு படிப்படியாக அருகிலிருந்த டேங்கருக்கும் தீ பரவியுள்ளது. 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக தெற்கு ரயில்வேயால் (Southern Railway) பல்வேறு ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.
(பிற்பகல் 3.15 மணி நிலவரம்)
முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை - மைசூரு வந்தே பாரத் விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை - மைசூரு ஷதாப்தி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 6.10 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை - கோயம்புத்தூர் கோவை அதிவிரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை - கோயம்புத்தூர் ஷதாப்தி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 6.25 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை - கேஎஸ்ஆர் பெங்களூரு டபுள் டெக்கர் விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 7.40 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை - கேஎஸ்ஆர் பிருந்தாவன் விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை - நாகர்சோல் விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 5.55 மணிக்குப் புறப்படவுள்ள சென்னை - ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படவுள்ள சென்னை - கேஎஸ்ஆர் லால்பக் விரைவு ரயில்
நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்படவுள்ள நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு பயணிகள் ரயில்
கோவையிலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு சென்னைக்குப் புறப்படவுள்ள கோவை - சென்னை சென்ட்ரல் கோவை அதிவிரைவு ரயில்
கோவையிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு சென்னைக்குப் புறப்படவுள்ள கோவை - சென்னை சென்ட்ரல் ஷதாப்தி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு கோவைக்குப் புறப்படவிருந்த சென்னை - கோவை இன்டெர்சிட்டி விரைவு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு கோவைக்குப் புறப்படவிருந்த சென்னை - கோவை வந்தே பாரத் விரைவு ரயில்
பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில் திருத்தனியிலிருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி விரைவு ரயில் ஜோலார்பேட்டையிலிருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து பகல் 1.35 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் விரைவு ரயில் அரக்கோணத்திலிருந்து புறப்படும். (முன்பு காட்பாடியிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.)
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு ரயில் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 6 மணிக்குப் புறப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து பகல் 1.15 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக மாலை 4 மணிக்குப் புறப்படும்.
ஹூப்ளியிலிருந்து ஜூலை 12 அன்று அரவு 8.25 மணிக்குப் புறப்பட்ட ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தப்படும்.
இன்று காலை 6 மணிக்குப் புறப்பட்ட கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் ஷதாப்தி விரைவு ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்படும்.
இன்று காலை 6.25 மணிக்குப் புறப்பட்ட கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் லால்பக் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்படும்.
திருவனந்தபுரத்திலிருந்து ஜூலை 12 அன்று இரவு புறப்பட்ட திருவனந்தபுரம் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் விரைவு பயில் காட்பாடியில் நிறுத்தப்படும்.
கோவையிலிருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்ட இன்டெர்சிட்டி விரைவு ரயில் சேலத்திலேயே நிறுத்தம்.
கோவையிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்ட கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் விரைவு ரயில் சேலத்தில் நிறுத்தம்.
கோவையிலிருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்ட கோவை - சென்னை சென்ட்ரல் இன்டெர்சிட்டி விரைவு ரயில் சேலத்தில் நிறுத்தம்.
மங்களூரு சென்ட்ரலிலிருந்து ஜூலை 12 அன்று இரவு 11.45 மணிக்குப் புறப்பட்ட மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் காட்பாடியில் நிறுத்தம்.
ரயில் சேவையில் மாற்றம்
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் அரக்கோணத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - அஷோகபுரம் விரைவு ரயில் பிற்பகல் 3.45 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்படும்.
விஜயவாடாவிலிருந்து இன்று பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்படவிருந்த விஜயவாடா - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் விரைவு ரயில் ரேனிகுண்டாவில் நிற்காமல் குடூர் வழியாக மாற்றப்பட்டுள்ளது.
எஸ்எம்விடி பெங்களூருவிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்ட எஸ்எம்விடி பெங்களூரு - தனபூர் சங்கமித்ரா விரைவு ரயில் பெரம்பூரில் நிற்காமல் மேலபாக்கம், ரேனிகுண்டா வழியாக மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் நிறுத்தமாக திருவள்ளூரில் நின்று செல்லும்.
எஸ்எம்விடி பெங்களூருவிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்பட்ட எஸ்எம்விடி பெங்களூரு - ஜசிதி விரைவு ரயில் பெரம்பூரில் நிற்காமல் மேலபாக்கம், ரேனிகுண்டா வழியாக மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் நிறுத்தமாக திருவள்ளூரில் நின்று செல்லும்.
எஸ்எம்விடி பெங்களூருவிலிருந்து பகல் 1.50 மணிக்குப் புறப்பட்ட எஸ்எம்விடி பெங்களூரு - பாட்னா ஹம்சஃபார் விரைவு ரயில் பெரம்பூரில் நிற்காமல் மேலபாக்கம், ரேனிகுண்டா வழியாக மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் நிறுத்தமாக திருவள்ளூரில் நின்று செல்லும்.
லக்னௌவிலிருந்து ஜூலை 11 அன்று இரவு 8.25-க்கு புறப்பட்ட லக்னௌ - யெஷ்வன்பூர் விரைவு ரயில் குடூர் மற்றும் ரேனிகுண்டா வழியாக மாற்றப்பட்டுள்ளது. குடூர் மற்றும் மேலப்பாக்கம் இடையே நிற்காது.
லோகமான்யா திலக் டெர்மினஸிருந்து ஜூலை 12 அன்று பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்ட லோகமான்யா திலக் டெர்மினஸ் - காரைக்கால் விரைவு ரயில் அரக்கோணம் - தாம்பரம் இடையே நிற்காமல் அரக்கோணம் வழியாக மாற்றப்பட்டுள்ளது.
திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்குப் புறப்பட்ட திருப்பதி - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் திருத்தனி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூரில் நிற்காமல் குடூர் வழியாக மாற்றப்பட்டுள்ளது.
மும்பை சிஎஸ்டியிலிருந்து ஜூலை 12 அன்று நண்பகல் 12.45 மணிக்குப் புறப்பட்ட மும்பை சிஎஸ்டி - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் திருத்தனி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூரில் நிற்காமல் குடூர் வழியாக மாற்றப்பட்டுள்ளது.
அஹமதாபாதிலிருந்து ஜூலை 12 அன்று காலை 9.40 மணிக்குப் புறப்பட்ட அஹமதாபாத் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் அரக்கோணம் மற்றும் பெரம்பூரில் நிற்காமல் குடூர் வழியாக மாற்றப்பட்டுள்ளது.
லோகமான்யா திலக் டெர்மினஸிலிருந்து ஜூலை 12 அன்று மாலை 6.40 மணிக்குப் புறப்பட்ட லோகமான்யா திலக் டெர்மினஸ் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் திருத்தனி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூரில் நிற்காமல் குடூர் வழியாக மாற்றப்பட்டுள்ளது.