கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹாரம்

பக்தர்கள் முருகா.. அரோகரா.. என முழக்கங்களை எழுப்ப..
கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹாரம்
1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா களைகட்டியது.

கந்த சஷ்டி விழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணி நடை திறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

இவற்றைத் தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹார விழா களைகட்டத் தொடங்கியது. இதைக் காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் கூடியிருந்தார்கள். நீதியை நிலைநாட்டும் விதமாக சூரன் வதம் செய்யப்பட, பக்தர்கள் முருகா.. அரோகரா.. என முழக்கங்களை எழுப்பி முருகனை வழிபட்டார்கள்.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார விழா பிரசித்தி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in