பாமக சாதிக்கட்சி என்றால் விசிக என்ன மாதிரியான கட்சி?: அன்புமணி ராமதாஸ்

இந்தியாவில் மது ஒழிப்புக்கூட்டத்தை யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அந்த வகையில் திருமாவளவன் இதை நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்
பாமக சாதிக்கட்சி என்றால் விசிக என்ன மாதிரியான கட்சி?: அன்புமணி ராமதாஸ்
ANI
1 min read

பாமக சாதிக்கட்சி என்றால் விசிக என்ற மாதிரியான கட்சி?. பல சாதனைகள் செய்த பாமகவை தொடர்ந்து திருமாவளவன் இழிவுபடுத்திவருகிறார், இதை அவர் தவிர்க்க வேண்டும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். செய்தியாளர்களிடம் அவர் பேசியவை பின்வருமாறு:

`சமீபத்தில் தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சர், மதுக்கடைகளை உடனடியாக மூடினால் தமிழகத்தின் சூழல் மிக மோசமாகிவிடும் என்று தமிழக மக்களைக் கொச்சைப்படுத்திப் பேசினார். தமிழக இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத நிலையைக் கொண்டு வந்ததுதான் திராவிட மாடல். இந்தச் சூழலுக்குக் காரணம் தமிழகத்தை 57 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் இந்தக் கட்சிகள்தான்.

இப்போதைய முதல்வர் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று கூறினார். இன்று அதைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேச மறுக்கிறார். மேடைக்கு மேடை மதுவின் பிரச்னைகள் குறித்துப் பேசிவரும் சகோதரி கனிமொழி அவர்கள் கடந்த மூன்றாண்டுகள் மௌனமாக இருக்கிறார்.

பாமக சாதிக்கட்சி என்றால் அப்போது விசிக என்ற மாதிரியான கட்சி? பாமக சமூக நீதிக்காகத் தொடங்கப்பட்ட ஒரு கட்சி. 36 ஆண்டுகளாக எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் 6 இட ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்களுக்கும் எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கும், இஸ்லாமிய சமூக மக்களுக்கும் உள் ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்திருக்கிறார். எம்.பி.சி. என்று 20 சதவீதம் 115 சமூதாயங்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்திருக்கிறார். எங்கள் கட்சி சமூக நீதிக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும், வேளாண் வளர்ச்சிக்காகவும், இலவச தரமான கல்விக்காகவும், மது புகையிலை கஞ்சா ஒழிப்புக்காகவும் போராடி வருகிறது.

இப்படியெல்லாம் எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை தொடர்ந்து திருமாவளவன் இழிவுபடுத்திவருகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும். அவரது கட்சியைப் பற்றி எங்களாலும் தரக்குறைவாகப் பேச முடியும். நீங்கள் மாநாடு நடத்த வேண்டுமென்றால் நடத்திக்கொள்ளுங்கள். இந்தியாவில் மது ஒழிப்புக்கூட்டத்தை யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்.

அந்த வகையில் திருமாவளவன் இதை நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்.டி பதித்திருக்கிறோம். திருமாவளவன் இப்போதுதான் எல்.கே.ஜி.க்கு வந்திருக்கிறார். அவர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in