தேசிய தேர்வு முகமை பற்றிதான் பிரச்னை: அண்ணாமலை

நீட் தேர்வில் இதுவரை தமிழ்நாட்டிலிருந்து 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீட் தேர்வில் பிரச்னை இல்லை என்றும், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் பற்றிதான் பிரச்னை உள்ளது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத் தாள் கசிந்ததாகவும், நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் சர்ச்சைகளை மேலும் வலுப்படுத்தின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால், அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. நீட் தேர்வைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் ஜூன் 21-ல் காங்கிரஸும், ஜூன் 24-ல் திமுகவும் போராட்டம் நடத்தவுள்ளன.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:

"நீட் தேர்வு பிரச்னை தொடர்பாக குஜராத், பிஹார் மற்றும் தில்லியில் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக சில பிரச்னைகள் எழுந்துள்ளன. நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் எந்தப் பிரச்னையும் இல்லை என மத்திய அமைச்சர் இன்று உறுதியளித்துள்ளார். தற்போது இருக்கும் பிரச்னை தேசிய தேர்வு முகமை குறித்து தான்.

நீட் தேர்வில் இதுவரை தமிழ்நாட்டிலிருந்து 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். தவறுகள் நடந்திருந்தாலோ, யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலோ அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in