நாயகன் படத்தை 16 முறை பார்த்திருக்கிறேன்: நீதிபதி என். செந்தில்குமார் | Madras HC |

நாயகன் படத்தின் மறுவெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது...
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புக்காட்சி)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புக்காட்சி)
1 min read

நாயகன் படத்தின் மறு வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார், அப்படத்தை 16 முறை பார்த்திருக்கிறேன், என்னால் காட்சி வாரியாக அதைச் சொல்ல முடியும் என்று கூறினார்.

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1987-ல் வெளியான படம் நாயகன். இந்தப் படம் கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே எஸ்ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தர்.

அதில், “கடந்த 2023-ல் ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் நாயகன் படத்தை வெளியிடும் உரிமையைத் தனது நிறுவனம் வாங்கிவிட்டது. இதை மறைத்து, வி.எஸ். ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தில் நாயகன் படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நாயகன் படம் மறு வெளியீடு செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும். மறு வெளியீடு மூலம் வசூலான தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி என். செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தை மறு வெளியீடு செய்ய அதிகாரபூர்வமான ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. காப்புரிமை சட்டம் எதுவும் மீறப்படவில்லை என்று வி.எஸ். இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ”நாயகன் படத்தை நான் 16 முறை பார்த்திருக்கிறேன். என்னால் இப்படத்தைக் காட்சி வாரியாகச் சொல்ல முடியும்” என்று கூறிய நீதிபதி என். செந்தில்குமார், படத்தின் மறுவெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்றும் எதிர்மனுதாரர் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Summary

Justice N. Senthilkumar of the Chennai High Court, who ordered that a ban cannot be imposed on the re-release of the film Nayagan, stated, "I have watched the film 16 times; I can recount it scene by scene."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in