
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் மாலை/இரவு முதல் மழை தீவிரமடையும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக காலை அறிவித்தது. இந்தப் புயலானது காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாலை/இரவு முதல் மழை தீவிரமடையும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்புடைய பதிவில் அவர் கூறியதாவது:
"சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - புதுவை மண்டலம் வரை மாலை/இரவு முதல் மழை தீவிரமடையும். வேறு எங்கும் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மண்டலம் முதல் புதுச்சேரி மண்டலம் வரை மிக அதிகனமழையைக் கொடுக்கப்போகிறது. சனிக்கிழமை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையும் மழை நீடிக்கலாம்.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்/புயல் புதுச்சேரி முதல் சென்னை மண்டலம் வரை நாளை நிறைய மழையைக் கொட்டித் தீர்க்கலாம். எனவே, விழிப்புடன் இருக்க வேண்டும். நேற்றிரவு சிறு மேகக் கூட்டங்கள் மட்டுமே 50 முதல் 60 மி.மீ. வரை மழையைத் தந்துள்ளது.