
100 நாள் வேலை திட்டத்தின் குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக மத்திய அரசு கடந்த 2005- ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது, ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலைக்கேட்கும் பட்சத்தில், அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும்.
இந்நிலையில், தற்போது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ரூ. 294 ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாளொன்றுக்கு ரூ. 319 ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், மாநில வாரியாகவும் இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.