
பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தடா பெரியசாமி, “பாஜகவின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளேன்” என்றார்.
2004-ல் பாஜகவில் இணைந்த இவர், அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன் பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் இவர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.