
கோவையிலும் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த செப்டம்பர் 1 முதல் டீ, காபியின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, டீ ரூ.15, காபி ரூ. 20 என விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் தற்போது டீ, காபி விலை உயர்ந்துள்ளது. கோவையில், டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என விலை உயர்த்தப்பட்டு விற்பனை ஆகிறது.
பால் விலை, டீ, காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு போன்ற காரணங்களால் விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
Tea | Coffee | Tea Coffee price hike | Coimbatore tea coffee price hike | Chennai tea coffee price hike